உலக நாடுகள் திரும்பி பார்க்கும் கேரளா-தமிழ்நாடு எல்லை அருகே நடைபெறும் 850 தம்பதிகளின் சமூக திருமணம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 April 2026

உலக நாடுகள் திரும்பி பார்க்கும் கேரளா-தமிழ்நாடு எல்லை அருகே நடைபெறும் 850 தம்பதிகளின் சமூக திருமணம்

 


உலக நாடுகள் திரும்பி பார்க்கும் கேரளா-தமிழ்நாடு எல்லை அருகே நடைபெறும் 850 தம்பதிகளின் சமூக திருமணம்



பாடந்தர மர்கஸ்  என்பது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஒரு முக்கிய இஸ்லாமிய கல்வி நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனம் ஆகும். இது அனாதைகளை ஆதரித்தல், இஸ்லாமிய கல்வியை வழங்குதல் மற்றும் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.கேரள முஸ்லிம் ஜமாத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனமான பாடந்தரா மர்க்கஸ், இந்த உன்னதமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 2014-ல் தொடங்கப்பட்ட சமூகத் திருமணம் என்ற இந்தக் கருத்தாக்கம், தேவர்ஷோலா அப்துஸ்ஸலாம் முஸ்லியார் அவர்களின் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.இந்த வருடமும்( ஏப்ரல் 5 -2026ல்பல்வேறு மதங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. 850 ஜோடிகளில், 50க்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.கிறிஸ்தவ மதத்தவர்கள் அவர்களுடைய திருமணங்கள் அவரவர் கோவில்களில் நடைபெறும். புதியதாக தங்களது தாம்பத்ய வாழ்க்கையில் இணையும் ஏழை எளிய திருமண ஜோடிகளுக்கு திருமண பரிசாக உடைகளும் தங்க ஆபரணங்களும் அளிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களின் நிர்வாகக் குழுக்கள் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து வருவது சமூக ஒற்றுமையினை காட்டுகிறது எனவும்  முற்றிலும் தேர்தல் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இந்த சமூக திருமண விழாவில் பல மத தலைவர்கள், அதிகாரிகள்,10000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் பந்தலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad