தமிழக குரல் செய்தி எதிரொலி - கோத்தகிரி நகராட்சி உடனடி நடவடிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 April 2026

தமிழக குரல் செய்தி எதிரொலி - கோத்தகிரி நகராட்சி உடனடி நடவடிக்கை


தமிழக குரல் செய்தி எதிரொலி - கோத்தகிரி நகராட்சி உடனடி நடவடிக்கை.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் கழிவு நீர் கால்வாய் தூர்வாராததினால் நோய் பரவும் சூழ்நிலை என தமிழக குரல் செய்தி வெளியிட்டோம். தகவலறிந்த கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் ஆணையர்  மற்றும் துப்புறவு ஆய்வாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திரு. பெள்ளி மற்றும் திரு. ராஜன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தூய்மை பணியாளர்கள் குழு கன்னேரிமுக்கு வந்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரம் பேண வழி வகுத்துள்ளது . பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


கோத்தகிரி நகராட்சியின் உடனடி நடவடிக்கையை தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு பாராட்டுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad