ஊட்டியில் பியூஷ் கோயல் உறுதி: “பாஜக–அதிமுக கூட்டணி அலை – போஜராஜ் வெற்றி உறுதி”
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்த அவர், பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் கூறுகையில், “தமிழக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஸ்டாலின் அவர்களை மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மு.க ஸ்டாலிண் தலைமையிலான குடும்ப ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. இளைஞர்கள் அரசு வேலைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இந்தத் தேர்தல் எடபாடிபழணிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். தமிழகத்தில் மாற்ற அலை வீசுகிறது. ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மக்கள் இந்த முறை உறுதியான தீர்மானம் எடுத்துள்ளனர்.
பாஜக–அதிமுக கூட்டணி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்,” என்றார்.
போஜராஜ் குறித்து அவர் பேசுகையில், “பிரதமர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் போஜராஜ். அவர் வெற்றி பெற்றால் உதகை மாவட்டம், குறிப்பாக உதகை பகுதியில் சுற்றுலா, சாலை, குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல உன்னதமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். தேயிலை விவசாயிகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும்,” என உறுதியளித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு


No comments:
Post a Comment