ஊட்டி வசந்த்& கோ அருகே மோதல்: விஜய் பாடல் ஒலிபரப்பு பின்னணியில் தகராறு சாலை மறியல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 April 2026

ஊட்டி வசந்த்& கோ அருகே மோதல்: விஜய் பாடல் ஒலிபரப்பு பின்னணியில் தகராறு சாலை மறியல்

 


ஊட்டி வசந்த்& கோ அருகே மோதல்:      விஜய் பாடல் ஒலிபரப்பு பின்னணியில் தகராறு சாலை மறியல்


நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் தேர்தல் இறுதிக்கட்டத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில் ஊட்டி வசந்த்& கோ அருகே இன்று ஏற்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.


ஊட்டி வசந்த்& கோ  கடையில் நடிகர் விஜய் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அந்த பாடல்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்


 இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகம் தவெக. சார்ந்த தொண்டர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது.


இந்த வாய்த்தகராறு விரைவில் கைக்கலப்பாக மாறி, இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சூழ்நிலை பதற்றமாக மாறியதால், இரு தரப்பினரும் சாலையில் இறங்கி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.


தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததும், மோதலில் ஈடுபட்டதுமாக இரு தரப்பினர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad