கன்னேரிமுக்கு மற்றும் சாமில்திட்டில் சிலிண்டர் வாகனம் முற்றுகை சுதா கேஸ் விளக்கம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பாரத் கேஸ் வினியோகஸ்தராக சுதா பாரத் கேஸ் நிறுவனம்உள்ளது. இன்று சிலிண்டர் டெலிவரி செய்ய வந்த வாகனத்தை கம்பட்டியை சேர்ந்தவர் கன்னேரிமுக்கிலும் மற்றும் சாமில்திட்டு ஹட்டியிலும் முற்றுகையிட்டனர் விளக்கம் கூறப்பட்ட நிலையில் சமாதானம் ஏற்பட்டது.
சுதா பாரத்கேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ரமேஷ் அவர்கள் கூறுகையில் ekyc எனும் பயனாளிகள் அடையாள பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இனிமேல் கேஸ் வினியோகம் செய்ய பாரத் கேஸ் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சுதா கேஸ் அலுவலகம் அமைந்துள்ள கோத்தகிரி சக்திமலை ரோடு அலுவலகத்திற்கு பயனாளிகள் நேரடியாக வந்து ekyc எனும் பயனாளர் விவரத்தை ஆதார்கார்டு நகல் மற்றும் கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தார்.
மேலும் சிலிண்டர் எடுத்த அடுத்த 45 நாட்கள் கழித்து அடுத்த சிலிண்டருக்கு முன் பதிவு செய்ய பாரத் கேஸ் நிறுவனத்தால் காலக்கெடு கம்ப்யூட்டர் மூலம் நிர்நயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆகவே பொதுமக்கள் ekyc செய்து பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment