விலை குறைந்த கேரட் நீலகிரி விவசாயிகள் கவலை.
சிவப்பு தங்கம் என போற்றப்படும் நீலகிரி காரட் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த நீலகிரி காரட்டிற்க்கு மிகுந்த கிராக்கி இருந்து வந்தது.
நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் சில புல்லுறுவி வியாபாரிகளால் விஞ்ஞான ஊழல் செய்யப்பட்டு நீலகிரி கேரட்டுடன் டெல்லி கேரட்டை கலப்படம் செய்து இடைத்தரகர்கள் லாபம் சம்பாதித்தனர். நீலகிரி காரட் விவசாயிகள் பல தரப்பட்ட போராட்டங்கள் நடத்தி பல இன்னல்களுக்கு இடையில் சுமாரான லாபம் சம்பாதித்து வந்தனர். தற்போது வளைகுடா போர் சூழலால் ரூபாய் 18 முதல் 27 வரையும் ஒன்றிரன்று 30 ஆகவும் விற்பனை ஆகிறது.
விவசாயிகள் வேறு வழியின்றி நஷ்டத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் போகிறது. விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:
Post a Comment