கோத்தகிரி கன்னேரிமுக்கு கழிவுநீர் கால்வாயால் நோய் பரவும் அபாயம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் தக்ஷிணாமூர்த்தி அவர்கள் வீட்டின் முன்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் நடைபாதையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் செல்லும் வழியாகவும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் வழியாகவும் உள்ளது மேலும் கோயிலுக்கு செல்ல வெறும் காலில் பக்தர்கள் நடந்துவருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அடைப்பை சுத்தம் செய்து தரவேண்டும் என்பது கன்னேரிமுக்கு பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment