மூலிகைகளின் முக்கியத்துவம் பாதுகாக்க மாணவர்களுக்கு அழைப்பு
பந்தலூர் டியூஸ் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப் படை சார்பில் "பல்லுயிர் சூழலில் மூலிகைச் செடிகளின் முக்கியத்துவம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளி முதல்வர் சுதிந்திரநாத் பேசும்போது தற்போது வேகமாக அழிந்து வரும் தாவர இனங்களில் உயிர் காக்கும் மூலிகைகள் மிகவும் அரிதாகி வருகின்றன. ஓரினச் சாகுபடி, அதிகப்படியான களைக்கொல்லி பயன்பாடு மற்றும் மக்களிடையே நிலவும் விழிப்புணர்வு குறைபாடு காரணமாக, வருங்காலத்தில் மருந்துக்குக் கூட மூலிகைகள் கிடைக்காத சூழல் உருவாகி வருவது வருத்தத்திற்குரியது. மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையோடு இணைந்து வாழ்வதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்."
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மாணவர்கள் விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்றிட மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே இயற்கை முறையில் மூலிகைத் தோட்டம், பூந்தோட்டம் மற்றும் காய்கறித் தோட்டங்களை அமைத்து இயற்கை பாதுகாப்பு பணிகளுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் வே.சிவதாஸ் பேசுகையில் உலக அளவில் மழைக்காடுகள் நிறைந்த கூடலூர் பகுதி, மூலிகைகளின் மிகப்பெரிய களஞ்சியமாக உள்ளது. இங்குக் காணப்படும் தனித்துவமான காலநிலை மற்றும் மண் வளமே இதற்குக் காரணமாகும். பழங்குடியின மக்களின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படும் பல மூலிகைகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வணிகப் பயன்பாட்டிற்கான மூலிகைக் காடுகளை உருவாக்குவது அவசியமாகும். படித்த இளைஞர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூலிகைகளைக் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் காடுகளைப் பாதுகாப்பதோடு மனித-விலங்கு மோதல்களையும் குறைத்துச் சமநிலையைப் பேண முடியும். எதிர்காலத்தில் உலகளாவிய மூலிகை பயன்பாட்டிற்கு கூடலூர் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விக்னேஸ்வரன், பிரவீன் தாஸ், மகேஸ்வரன், பாக்கியம், சந்திரிகா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment