போதை உடலையும் சமூகத்தையும் பாதிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழாவும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார்..
இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை துவக்கி வைத்து பேசிய செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலாளர் மோரிஸ் சாந்த குரூஸ் பேசும்போது செஞ்சிலுவை சங்கமானது போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாகி இன்று உலக நாடுகள் முழுவதிலும் தனது பணியை சிறப்புடன் செய்து வருகிறது இந்தியாவில் ஜனாதிபதியை தலைவராக கொண்டும் மாநிலங்களில் ஆளுநர்களை தலைவராக கொண்டும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் செயல்பட்டுவரும் செஞ்சிலுவை சங்கம், தற்போது பள்ளிகளில் இளம் சிறார் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கல்லூரிகளை இளையோர் செஞ்சிலுவை சங்கம் என செயல்பட்டு வருகிறது
செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை முதலுதவி பயிற்சி மற்றும் மனிதநேயத்தோடு பொதுமக்களுக்கு உதவுவது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்து வருகிறது.
இளைஞர்களை நல்வழியில் செல்ல செஞ்சிலுவை சங்கத்தில் சேர்த்து பயன்பெறலாம் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இளைஞர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்கள் சமூகத்தில் பெரிய தாக்கங்களை உருவாக்குகிறது மனிதர்களின் நடத்தையில் திருட்டு, பொய், கொலை வரை குற்றங்கள் செய்யத் தூண்டுவதோடு மனித உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் நோய்களையும் உருவாக்கி விடுகிறது. எனவே இளையோர்கள் சமூகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து தீய வழிகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும் கூடலூர் அரசு கலைக் கல்லூரி ஆங்கில பேராசிரியருமான செல்வகுமார் பேசும்போது எல்லா குற்றங்களுக்கும் அடிப்படையாக போதைபொருள் பயன்பாடு உள்ளது போதையை தவிர்த்து வாழ உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றை கையில் எடுத்து நல்வழியில் வாழ வேண்டும் என்றார்
தொடர்ந்து தொழிற்பயிற்சி மையத்தில் இளம் செஞ்சிலுவை சங்க கிளை துவக்கப்பட்டது நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி மைய பயிற்றுநர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment