நூலகம் விரிவுபடுத்த கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2026

நூலகம் விரிவுபடுத்த கோரிக்கை


 நூலகம் விரிவுபடுத்த கோரிக்கை


கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியில் செயல்படும் நூலகத்தில் தினசரி செய்தித்தாள்கள் வார மாத பருவ இதழ்கள், பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. இந்நூலகத்திற்கு பல்வேறு வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நூலகம் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. இருக்கை வசதிகள் இல்லாமல் மற்றும் புத்தகங்கள் எடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் வாசகர்கள் தினசரி செய்தித்தாள்கள்  வசிக்க புத்தகங்கள் எடுத்து படிக்க சிரம்மபடும் நிலையே உள்ளது.


நூலகம் மேம்பாட்டிற்கு தேவையான 

இருக்கை வசதிகள் இல்லாமல் வாசகர்கள் அமர்ந்து படிக்க இயலாத நிலையில் இருக்கிறார்கள். 

அதுபோல் புத்தகங்கள் ரேக்குகளில் இருந்து எடுப்பதற்கான வசதி குறைவாக உள்ளது. 

பருவ இதழ்கள் மற்றும் வாசகர்கள் நூல்களை எடுத்து படிக்க வாசிப்பு அறை வசதிகள் இல்லாமல் உள்ளது.


இதனால் வாசகர்கள் மிகவும் சிரமப்படும் சுழல் உள்ளது நூலகம் அருகில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. அருகில் பேருந்து நிலையம், குடியிருப்புகள் என பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள நூலகம் இடவசதி இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே நடுவட்டம் கிளை நூலகத்தை மேம்படுத்த புதிய இருமாடி கட்டிடம் கட்டி தரவும். கூடுதல் வசதிகள் செய்து தரவும் நூலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad