அடிப்படை வசதிகள் இல்லாததால் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி
நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குக்கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளது. 300க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுடைய ஊருக்கு செல்லும் சாலை கடந்த 2014-ஆம் வருடம் மகாத்மா காந்தி ஊரக சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டது. எனவும் அதன் பின் எந்தவொரு சாலை பராமரிப்பும் செய்யப்படவில்லை. எனவும் அதனால் தற்பொழுது சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகுந்த சிராமத்திற்கு உள்ளாகின்றனர். என்று கோரிக்கை வைத்துள்ளனர் சாலையை சீரமைக்கவும் அடிப்படை வசதிகளை செய்து தர பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும் மேலும் குடி தண்ணீர், வடிநீர் கால்வாய், தடுப்புச்சுவர், மின்சார வசதி போன்ற அடிப்படை தேவைகள்கூட எங்கள் ஊருக்கு சரிவர இல்லை என்பதனாலும் மற்றும் எண்ணற்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஒருமனதாக புறக்கனிப்பதாக கோரிக்கை வைத்துள்ளனர். சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment