பந்தலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2026

பந்தலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்

 


பந்தலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் 


மகளிர் தினத்தை முன்னிட்டு பந்தலூர் முழுநேர கிளை நூலகம், மற்றும் மகளிர் தையல் பயிற்சி மையம் ஆகியவற்றில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


பந்தலூர் கிளை நூலகத்தில் பந்தலூர் கிளை நூலக வாசகர் வட்டம், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் இணைந்து நடத்திய  மருத்துவ முகாமிற்கு கிளை நூலகர்கள் அறிவழகன், நித்தியகல்யாணி, நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.


மருத்துவர் அஸ்வந்த்  தலைமையில் மருந்தளுநர் நவீன், செவிலியர் சுமதி நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் வாசகர்கள், பொதுமக்கள், போட்டி தேர்வு மாணவர்கள் உட்பட பலர் இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இதர பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.


அதுபோல பந்தலூர் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், தையல் பயிற்சி மையம் ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் அஸ்வந்த் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் தையல் பயிற்சி மைய மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, மற்றும் பொது மருத்துவ சிகிச்சை பரிசோதனை செய்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad