தேவையில்லா அச்சம் டேங்க் ஃபுல் செய்யும் வாகன ஓட்டிகள்: நீலகிரி மாவட்டம் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2026

தேவையில்லா அச்சம் டேங்க் ஃபுல் செய்யும் வாகன ஓட்டிகள்: நீலகிரி மாவட்டம் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை

 


தேவையில்லா அச்சம்  டேங்க் ஃபுல் செய்யும் வாகன ஓட்டிகள்: நீலகிரி மாவட்டம் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை


உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் இன்று அதிகமான வாகனங்கள் திரண்டதால் நீண்ட வரிசை காணப்பட்டது.


 இருசக்கர, மூன்றுசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கனரக வாகனங்களும் அதிக அளவில் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்ப வந்ததால் பங்குகள் முன்பு நெரிசல் ஏற்பட்டது.


சில வதந்திகள் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தேவையில்லா அச்சத்தில் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் டேங்க் ஃபுல் செய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டன.


ஆனால், அதிகாரப்பூர்வமாக எரிபொருள் தட்டுப்பாடு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் தேவையில்லா அச்சத்தால் பொதுமக்கள் அதிகமாக எரிபொருள் நிரப்புவதால் பங்குகளில் தற்காலிக நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


தேவையில்லா வதந்திகளை நம்பாமல், வழக்கமான அளவில் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர் 


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad