மகளிர்களுக்கு சுயதொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 March 2026

மகளிர்களுக்கு சுயதொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


மகளிர்களுக்கு சுயதொழில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி 


கூடலூர் திவ்யா தட்டச்சு பயிற்சி மையத்தில் மகளிருக்கான சுயதொழில் விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.


ஆல் தி சில்ரன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர் ரமணி தலைமை தாங்கினார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 


மகளிர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்கவும் சுயதொழில் செய்து முன்னேறலாம். சுயதொழில் தொடங்குவதற்கான அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் பல பயிற்சிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கி வருகிறது.  இதனை அடிப்படையாக கொண்டு  தையல் பயிற்சி, சிறுதானிய உணவு தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை சோப்பு தயாரித்தல் போன்ற குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்கள் குறித்த பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்றார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது பெண்கள் மற்றவர்களைச் சார்ந்திராமல், சொந்தமாக வருமானம் ஈட்டுவதன் மூலம் சமூகத்தில் அவர்களுக்குக்  அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை லாபகரமாகச் சந்தைப்படுத்துவது மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது வருவாயினை பெருக்கும் என்றார்.


நிகழ்ச்சியில் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad