பந்தலூர் மகளிர்களுக்கு சோப்பு தயாரிக்க பயிற்சி
பந்தலூர், மார்ச் 27: பந்தலூர் ஏகல் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் மகளிர்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், 'குளிர்முறை சோப்பு' தயாரிப்பதற்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆல் தி சில்ரன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு மகளிர் தையல் பயிற்சி மையம் ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பயிற்சியை துவக்கி வைத்து பேசும்போது மகளிர்கள் தங்கள் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் சோப்பு குறைந்த முதலீட்டில் வீட்டில் தயாரிக்க முடியும்.
தயாரிக்கப்பட்ட சோப்புகளை முதலில் உள்ளூர் அளவிலும் பின்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரபடுத்தியும் சந்தைப்படுத்த முடியும். இதன் மூலம் பெண்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே சிறு தொழில் தொடங்கி வருமானத்தை ஈட்டி, பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற ஒரு வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் குளியல் சோப்புகளை எளிய முறையில், குறைந்த முதலீட்டில் தரமானதாக தயாரிப்பது குறித்தும் ரசாயன கலப்பில்லாத இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சோப்பு தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment