கடைக்கம்பட்டி ஶ்ரீ கன்னிமாரியம்மன் பூ குண்டம் திருவிழா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைகம்பட்டியில் அமைந்துள்ள சக்தியே வடிவான பேசும் தெய்வம் என்று பக்தர்களால் போற்றிப் புகழும் ஶ்ரீ கன்னிமாரியம்மன் பூ குண்டம் திருவிழா மார்ச் 29,30,31 ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுவதால் பக்தகோடிகள் கலந்துகொண்டு ஶ்ரீ கன்னிமாரியம்மன் அருள் பெற்றுச் செல்லுமாறு கடைக்கம்பட்டி ஊர் தலைவர், நாட்டாமை, காரியதரிசி, ஊர் பொதுமக்கள் மற்றும் பாரதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஶ்ரீ பால் முனீஸ்வரர் மஹா கும்பாபிஷேகம் தொடங்கி ஞாயிறு பூ குண்டம் மரம் கொண்டு வர செல்லல், திங்கள் பூ குண்டம் மரம் கொண்டு வருதல்,செவ்வாய் காலை 11 மணிக்கு கரக ஊர்வலம் வருகிறது பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை அன்னதானம் வழங்கப்படும் மாலை 4.30 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment