புலிகள் கூட்டமாக உலா - மக்கள் பீதி.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மைனலாவில் ஐந்து புலிகள் ஒரு சேர பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் ஹாயாக உலா வந்துள்ளதை ஒரு தொழிலாளி வெளியிட்ட காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளான சிறுத்தை, காட்டெருமை,கரடி, புலி ஆகியவை குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரத்திலும் வந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் மைனலா பகுதியில் புலிகள் கூட்டமாக சுற்றித்திரியும் காட்சி அச்சுறுத்தலாக உள்ளது. இதே நிலை நீடித்தால் நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் செய்ய பயந்து பாலைவனமாகும் நிலை வந்துவிடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். கோடை விடுமுறை மற்றும் தேர்தல் உள்ளதால் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment