செல்ஃபி விபத்து: நீலகிரி மாவட்டம் ஊசிமலை பல்லத்தாக்கில் விழுந்த சுற்றுலா பயணி உயிருடன் மீட்பு ராணுவம், வனத்துறை இணைந்து சாதனை
நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செல்ஃபி விபத்தில், பள்ளத்தாக்கில் விழுந்த சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள ஊசிமலை பல்லத்தாக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இயற்கை காட்சிகளால் பிரபலமான இந்த இடத்தில் பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி செல்ஃபி எடுக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் (35) நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். நேற்று பல்லத்தாக்கின் விளிம்பில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி சுமார் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தார்.
இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியைத் தொடங்கினார்கள். இரவு நேர இருள் காரணமாக பணியில் இடையூறு ஏற்பட்டதால், தேடுதல் பணியை இடைநிறுத்தி இன்று காலை மீண்டும் தீவிரப்படுத்தினர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை மேற்கொண்டு, வெல்லிங்டன் ராணுவ முகாம் ராணுவ அதிகாரிகளின் உதவியும் கோரியது. அதன் பேரில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை இணைந்து கடினமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை, சிவகுருநாதன் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய | இடங்களில் செல்ஃபி எடுப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதையும் இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment