நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் வனவிலங்கு அச்சம்:
கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலவும் சிறுத்தை காரணமாக பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்குள் வருவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, கோத்தகிரி பேருந்துநிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.
சில நேரம் அப்பகுதியில் சுற்றித் திரிந்த பின்னர், அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் மனதில் அச்சம் நீங்காமல் உள்ளது.
இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் உலவும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும், இரவு நேரங்களில் பாதுகாப்பு ரோந்துப் பணிகளை அதிகரித்து, வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment