குன்னூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பு
குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, குன்னூரில் இன்று சிறப்பான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
குன்னூர் காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சனில், குன்னூர் நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, குன்னூர் நகராட்சி எஸ் ஓ சரவணன் தேர்தல் பிரிவு அலுவலர் ரகு தலைமை தாங்கி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முக்கிய சிறப்பு விருந்தினர்கள் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களான திரு. ஜெபரத்தினம் (சிட்டிசன் போரம்) சமூக ஆர்வலர் ராயல் கோர் திருமதி. உஷா பிராங்க்ளின், ஒய். எம்.சி.ஏ. செயலாளர் ரெஜூலின் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் அதன் அவசியம் குறித்துச் சிறப்பான உரையாற்றினர்.
மேலும், நல் உள்ளம் உளிகள் சண்முகம் பேரிடர் குழு தன்னார்வலர் சிவகுமார் கிப்சன் கிரேஸ் டிரஸ்ட், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் டேய்ஸி, வாழ்வு ஒளி அறக்கட்டளை லதா . புதிய புயல் ஆறுமுகம், வாழ்வோம் வாழ வைப்போம் ராகேஷ், குன்னூர் ஆம்புலன்ஸ் சல்மான் -ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, போக்குவரத்து காவல்துறையினர், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், மகளிர் குழுக்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் உறுதிமொழி: சாலை பாதுகாப்பு குறித்து எஜுகேஷனல் டிரஸ்ட் ஜாபர் வாசிக்க, அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் பதாகைகள்ஏந்தி அனைவரும் தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டன.
கல்லூரி மாணவ-மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்
நிகழ்ச்சியின் இறுதியில், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கன்டோன்மென்ட். வினோத் குமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
தமிழ் இயக்கம் மாணவர் அணி பொறுப்பாளர் சுதிர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
"விபத்தில்லா நீலகிரியை உருவாக்குவதே இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நோக்கம்" எனத் தனது உரையில் கல்லூரி முதல்வர் முனைவர் சனில் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment