அங்கக முறையில் காய்கறிகள் சாகுபடி செயல்முறை விளக்கம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு.பரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி அங்கக முறையில் காய்கறி சாகுபடி குறித்த செயல்முறை விளக்கம் சாமில்திட்டு கிராமத்தில் முன்னோடி விவசாயி திருமதி. கண்ணம்மாள் அவர்களின் தோட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இச் செயல்முறை விளக்கப் பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. பிரசாந்த் அவர்கள் அங்கக முறையில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் போது ஏற்படும் இடற்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. அறிவுச்செல்வன் அவர்கள் வேளாண் மற்றும் வேளாண் சகோதர துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப் படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. சர்குணசீலன் அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான ட்ரைகோடெர்மா விரிடி, பசிலோமைசிஸ் மற்றும் பேவேரிய ஆகியவற்றை கொண்டு கட்டுபடுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்களின் தொகுப்புகள் மற்றும் நெகிழி கூடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment