உதகையில் பெண்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்தும் நோக்கில் இன்று சிறப்பு நேர்காணல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 March 2026

உதகையில் பெண்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்தும் நோக்கில் இன்று சிறப்பு நேர்காணல்

 


ஃபியூச்சர் இந்தியா கல்ச்சுரல்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் பவுண்டேஷன் சார்பில் பெண்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்தும் நோக்கில் இன்று சிறப்பு நேர்காணல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழில் முனைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சி ஃபியூச்சர் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் திரு. ரஞ்சித் குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் தொழில் முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.


நிகழ்ச்சியின் இறுதியில், ஃபியூச்சர் இந்தியா பவுண்டேஷன் தலைவர் திரு. மதிவண்ணன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad