நீலகிரி: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாரூர் ஷஹீத் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2026

நீலகிரி: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாரூர் ஷஹீத் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


நீலகிரி: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாரூர் ஷஹீத் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


மேரா யுவா பாரத், நீலகிரி மாவட்டத்தின் சார்பில் இன்று நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாரூர் ஷஹீத் தின விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.


இப்பேரணியை கல்லூரி முதல்வர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் தன்னுடைய உரையில், வீரமரணமடைந்தோரின் தியாகங்களை நினைவுகூருவதின் அவசியத்தையும், இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.


இந்நிகழ்ச்சி மேரா யுவா பாரத் உறுப்பினர் திரு. ரஞ்சித் குமார் மற்றும் NSS திட்ட அலுவலர் திரு. முஃபேஷியர் அவர்களின் தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.


இந்த பேரணியில் சுமார் 90 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, தேசப்பற்று, சமூக பொறுப்பு மற்றும் ஷஹீத் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.


நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகத்தினரும், கலந்து கொண்ட மாணவர்களும் பாராட்டுக்களுடன் சிறப்பாக நிறைவுற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad