பந்தலூர் டியூஸ் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்விக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது மருத்துவம் படிக்க நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கு 11 மற்றும் 12ம் வகுப்பு படங்களில் இருந்தே கேள்விகள் அதிகம் கேட்கப்படும். இதில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் செலவு குறைவாக படித்து விடலாம். மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்புகள் மருத்துவர் உதவியாளர்கள், செவிலியர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள் படிப்புகள் உள்ளன.
செவிலியர் பயிற்சிக்கு வெளிநாடுகள், உள்நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.
அதுபோல தெரபிஸ்ட் ஆப்டோமெட்ரி உள்ளிட்ட துணை படிப்புகள், பார்மசியில் டிப்ளமோ, இளநிலை மருந்தளுநர், பார்ம் டி 6 ஆண்டுகள் படிக்க வேண்டும். இவை வேலை உறுதிசெய்யும் படிப்புகளாக உள்ளன. மருத்துவம் படிக்க அதிக செலவு என்பதை மறந்து நல்லா படித்தால் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டால் செலவை குறைத்து கொள்ள முடியும். என்பதை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு அலுவலர் மகேஷ்வரன், உப்பட்டி ITI அலுவலக உதவியாளர் லோகேஷ்வரன் ஆகியோர் உயர்கல்வி வாய்ப்புகள், மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உறவுமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment