பந்தலூர் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மறதி பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆல் தி சில்ரன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜனார்த்தனன் பேசும்போது மறதி நோய் பரவலாக வயதானவர்களிடம் ஏற்படுகிறது. குறிப்பாக தெரிந்த இடங்களிலேயே வழி தவறுவது அல்லது நேரத்தையும் கிழமைகள் போன்றவற்றில் குழப்பம், பொருட்களின் பெயர் மறத்தல், காரணம் இல்லாமல் கோபப்படுவது, பயப்படுவது அல்லது அதிக கவலை அடைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயதாகும்போது நமது உடலில் புரதச்சத்து குறைவதனாலும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றால் செல்கள் செயல் இழப்பு காரணமாகவும், மறதி என்பது அதிகமாக வருகிறது. தொடர்ந்து மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தல் அல்சைமர் ஆக மாறும். இதனை தவிர்க்க ஆரோக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தூக்கம் குறைவு, அதிக நேரம் மொபைல் பார்த்தல் போன்றவற்றாலும் மறதி அதிகம் ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒமேகா-3, வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடற்பயிற்சி, தியானம், சரியான அளவு தூக்கம் போன்றவை மறதி பாதிப்பை தவிர்க்க உதவும் என்றார்
நிகழ்ச்சியில் செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment