தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2026

தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

 


தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.


கூடலூர் அருகே பாண்டியார் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தேயிலை தொழிற்சாலை டீ மேக்கர் சேகர், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், செஞ்சிலுவை சங்க நிர்வாகி லாய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பாண்டியார் தேயிலை தோட்ட கோட்ட மேலாளர் ஜோ பெனோ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஶ்ரீநாத் தலைமையில் மருந்தளுநர் நவீன், செவிலியர் சுமதி  உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 


தேவையுள்ளவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட 50கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad