வன விலங்கு தாக்கி உதகை அருகே தோடர் இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 February 2026

வன விலங்கு தாக்கி உதகை அருகே தோடர் இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழப்பு


 வன விலங்கு   தாக்கி உதகை அருகே தோடர் இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழப்பு


நீலகிரி மாவட்டம் சண்டிநல்லா அருகே உள்ள  சின்ன காடிமந்து பகுதியில் இரவு 8.00 மணி அளவில் வேலை முடித்து வீடு திரும்போது தோடர் இனத்தைச் சேர்ந்த சுமார் 57 வயது ஆண் ஒருவர் புஷ் தாள் குட்டன் என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இன்று காலை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள், உடலின் பல பகுதிகளை வனவிலங்குகள் உண்ட நிலையில் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு மேலான விசாரணையை தொடங்கியுள்ளனர்.


முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் காட்டுப் பகுதிக்குள் சென்ற போது புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மரணம் குறித்த துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் காரணமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும், குறிப்பாக உதகை சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்றும் இந்த வனவிலங்கு தாக்குதல் ஆனது தொடர்ச்சியாக இதே போல் நடந்து கொண்டிருக்கிறது எங்களுக்கு வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென சாலை மறியல் செய்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் 15 நாட்களில் இதற்கான தீர்வு கிடைக்கும் என அனைவருக்கும் நம்பிக்கை தெரிவித்த பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad