மாபெரும் சாதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு:
2025 26 கல்வி ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டியில் கெங்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் வெற்றிவேல் மாநில அளவிலான களிமண் பொம்மைகள் செய்தல் போட்டியில் பங்கேற்று மாநில இரண்டாம் இடம் பெற்று மாபெரும் சாதனையை படைத்தான். நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகள் 3 முதல் 5 ஆம் வகுப்பு பிரிவில் மாநில அளவில் வெற்றி பெறும் முதல் மாணவன் என்ற பெருமையை பெற்று கெங்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கும் கோத்தகிரி வட்டாரத்திற்கும் நீலகிரி மாவட்டத்திற்கும் பெருமை பெற்று தந்துள்ளான்.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவன் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோரை பாராட்டினார்.
எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஐயா அவர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் வட்டார மேற்பார்வையாளர் மற்றும் கோத்தகிரி வட்டார கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரிய பயிற்றுநர்கள் கீழ்கோத்தகிரி குறுவள மைய கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உற்சாகம் தந்து ஊக்கப்படுத்திய கோத்தகிரி வட்டார அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழ குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment