எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் 21.02.2026 அன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
மாணவிகளின்அணிவகுப்பு குழுவாரியாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒலிம்பிக் சுடர் சிறப்பு விருந்தினரின் முன்னிலையில் கல்லூரி விளையாட்டு வீராங்கனைகளால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாணவிகளின் அணி வகுப்புப்பயிற்சி நடைபெற்றது. உடற்கல்வி இயக்குநர் முனைவர் .அகிலா அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார்.
இவ்விழாவின்சிறப்பு விருந்தினராக குன்னூர் தென்னக ரயில்வே துறையைச் சேர்ந்த பி. கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “பெண்களுக்கு விளையாட்டு என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிக்கிறது. விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் அரசு வேலை கிடைப்பது உறுதி” என்று தெரிவித்தார்.
பின்னர்ஓட்டப்பந்தயம் (200 மீ, 400 மீ, 1500 மீ), தொடர் ஓட்டம், சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.,
இறுதியாக சுயநிதி பிரிவுத் தலைவர் திருமதி கவிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக உதகை தாலுகா செய்தியாளர் என். வினோத்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment