பந்தலூர் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பந்தலூர் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், சேரம்பாடி கர்மேல் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்மினை நடத்தினார்கள்
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌஸாத், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ராஜா, இந்திரஜித், ஜேசுதாஸ், கர்மல் ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் தனராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவாலா வானசரகர் சஞ்சீவி முகாமினை துவக்கி வைத்தார்.
உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் தாவா, ஜெப்ரின், சுவேதா அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 22 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்டமாக 15 பேர் கண் புறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாணவ மாணவிகள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு 30ககும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 50 சதவீதம் கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டது.
மேலும் இந்திய செஞ்சிலுவை சங்கம் நடமாடும் மருத்துவ மருத்துவர் ஷர்மிளா தலைமையில் மருத்துவ குழுவினர் பொது சிகிச்சை அளித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment