காஷ்மீராக மாறிய உதகமண்டலம் (ஊட்டி): நீலகிரியில் பிப்ரவரி இரண்டாம் வாரத்திலும் கடும் உறைபனி தாக்கம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 February 2026

காஷ்மீராக மாறிய உதகமண்டலம் (ஊட்டி): நீலகிரியில் பிப்ரவரி இரண்டாம் வாரத்திலும் கடும் உறைபனி தாக்கம்


காஷ்மீராக மாறிய உதகமண்டலம் (ஊட்டி): நீலகிரியில் பிப்ரவரி இரண்டாம் வாரத்திலும் கடும் உறைபனி தாக்கம்


நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், ‘குட்டி காஷ்மீர்’ போல் காட்சியளிக்கிறது.


இன்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில்,காந்தள், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.


அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.


தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.


இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது  


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad