இருசக்கரமும் டிராக்டர் மோதி விபத்து:
நீலகிரிமாவட்டம், உதகை படகு இல்லம் செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் திடீரென மோதியது.
மோதிய உடனே, சற்றும் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வாகனத்தை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு



No comments:
Post a Comment