பந்தலூர் வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி, பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேரங்கோடு பஜார், கன்னம்வயல் வாக்குச்சாவடி மையம், மன்னாத்திவயல் வாக்குச்சாவடி மையம், மரடி வாக்குச்சாவடி மையம், கொன்னச்சல் வாக்குச்சாவடி மையம், கள்ளிச்சால் வாக்குச்சாவடி மையம், அய்யன்கொல்லி வாக்குச்சாவடி மையம், காவயல் வாக்குச்சாவடி மையம், மழவன்சேரம்பாடி வாக்குச்சாவடி மையம், கொளப்பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சாய்வுதளம் ஆகியவை குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர், மேலும் கக்குண்டி கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்குமாறு சம்மந்த துறை அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், தேவாலா காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார், பந்தலூர் வட்டாட்சியர் சிராஜூதீன் நிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment