காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (SHDS) ன் கீழ் அங்கக வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் உதகை வட்டாரத்திற்கு சார்ந்த அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்பதனை தோட்டக்கலை உதவி இயக்குனர் அவர்களின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக இத்தலார் கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது இப்பயிற்சியில் இத்தலார் ஊர் தலைவர் அவர்கள் முன்னிலை வகித்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முன்னுரை வழங்கி தோட்டக்கலை துணை இயக்குனர் அவர்கள் திட்டங்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினார் மேலும் வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலகம் மண் பரிசோதனை நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், பயிர் காப்பீட்டு நிறுவனம் போன்ற துறை சார்ந்த அலுவலர்கள் மேலும் தமிழ்நாடு தோட்டக்கலை இயற்கை வேளாண்மை சங்கம் (THOFA ) நீலகிரி மாவட்ட செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு தங்களின் திட்டங்களை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது இதில் 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கங்களை புரிந்து கொண்டனர்.
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment