களை கட்டிய சோலூர் பொக்காபுரம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 February 2026

களை கட்டிய சோலூர் பொக்காபுரம்


 களை கட்டிய  சோலூர் பொக்காபுரம்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே அமைந்துள்ளது பொக்காபுரம் ஶ்ரீ மாரியம்மன் கோயில். 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 22 ஆம் தேதி மாவிளக்கு பூஜை 23 ஆம் தேதி தேரோட்டம் 24 ஆம் தேதி கிடா வெட்டு நடைபெறுகிறது. இன்று முதலே பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அதிகமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு விழா களை கட்டத் தொடங்கியுள்ளது.  வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் இருக்கின்றனர். சோலூர் (முதல் நிலை) பேரூராட்சி நிர்வாகத்தினர்  சோலூர் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் ஆயத்தப்பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad