திம்பட்டி எட்டூர் காளியம்மன் கோயில் இரண்டாம் கால‌ பூஜை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 February 2026

திம்பட்டி எட்டூர் காளியம்மன் கோயில் இரண்டாம் கால‌ பூஜை.

 


திம்பட்டி எட்டூர் காளியம்மன் கோயில் இரண்டாம் கால‌ பூஜை.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி திம் பட்டியில் அமைந்துள்ள எட்டூர் ஶ்ரீ  உஜ் ஜயினி காளியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று இரண்டாம் கால ஓமகுண்டம் பூஜை விமரிசையாக நடைபெற்றது. அம்மனை கீழ் அணையட்டி தொட்டமனையிலிருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வந்து கோயில் வளாகத்தில் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. எட்டூர் மக்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனின் ஆசிபெற்றதுடன் நாளைய கும்பாபிஷேக விழா ஆயத்தப்பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad