காசநோயளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம்
கூடலூர் அரசு மருந்தகதில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் காசநோயளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்கூடலூர் அரசு மருந்தாக மருந்துதாளுனர் கண்ணதாசன், செவிலியர் செல்வி, காசநோய் தடுப்பு பிரிவு மேற்பார்வையாளர் மனோஜ், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜய குமார் பேசும்போது காசநோய் பரவியப்பின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஆறு மாதம் தொடர் சிகிச்சை முறையாக எடுத்துக்கொண்டால் குணமாகிவிடும். அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும் என கூறினார்.
அதுபோலதேவாலா நகர சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர் ரக்சனா கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்கள்.
தொடர்ந்துகாசநோயால் பாதிக்கப்பட்ட 30 பயனாளர்களுக்கு ஊட்டசத்து உணவு பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment