பந்தலூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர்அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்
பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் நவநீத் பேசும்போது ஆண்களுக்கு சிறுநீரக புற்றுநோய் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. உடலில் கட்டி இருப்பது, நெருடலாக தெரிந்தாலோ, தொடர் காய்ச்சல், பசியின்மை போன்றவை ஏற்படும் போது அரசு மருத்துவ மனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆரம்ப கட்ட நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணம் பெற முடியும். என்றார்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நொறுக்குத்தீனி, சுவையூட்டிய உணவு பழக்கம், ரசாயனம் கலந்த மசாலா பொடிகள் போன்றவை பயன்படும் போதைபொருள் பயன்பாடுகள் காரணமாகவும் உடலில் பாதிப்புகள் ஏற்பட்டு அதன்மூலம் புற்றுநோய் உருவாகும். உணவில் பூண்டு, இஞ்சி, குருமிளகு போன்றவை உணவில் எடுத்து கொள்வது, இரசாயன கலப்பில்லாத உணவுகளை எடுத்துக்கொள்தல் புற்றுநோய் தடுக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவ பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment