நடுவட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 February 2026

நடுவட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

 


நடுவட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கூடலூர் அருகே நடுவட்டதில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார் 


செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஜெய்னப் பாத்திலா தலைமையில் மருந்தாளுணர் நவீன், செவிலியர் சுமதி நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர் தேவை உள்ளவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.  


50க்கும்மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad