கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கற்றல் பயன்பாட்டிற்கான உபகரண பொருட்கள் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
கூடலூர் அங்கன்வாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் தலைமை வகித்தார் கூடலூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கௌரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பிரஹ்ம வித்யா நாயகி கற்றல் உபகரணங்களை வழங்கி பேசும்போது இந்த கற்றல் உபகரண பொருட்கள் மூலம் குழந்தைகள் விளையாட்டு மூலம் தங்களது ஆற்றல் திறன்களையும் மற்றும் கல்வி திறனையும் வளர்க்க ஏதுவாக இருக்கும். அங்கன்வாடி குழந்தைகள் புரிதல் திறன் வளர உதவும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கூடலூர்வட்டாரத்தில் உள்ள 15 அங்கன்வாடி மையங்களுக்குஇந்த கற்றல் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் ராஜேஸ்வரி, அமுதா, ராஜாமணி, மங்கையர்கரசி, மலர்விழி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment