ஆவின் பாலாடைக்கட்டி தொழிற்சாலை திறப்பு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 February 2026

ஆவின் பாலாடைக்கட்டி தொழிற்சாலை திறப்பு:

 


ஆவின் பாலாடைக்கட்டி தொழிற்சாலை திறப்பு:   


உதகை ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாடைக் கட்டி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.


பால்வளத் துறை சாா்பில், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.14.41 கோடி மதிப்பில் ஒரு மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி திறன் கொண்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.


இதையொட்டி, உதகை ஆவின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் குத்துவிளக்கேற்றி இயந்திரத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.


பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: புதிதாக தொடங்கப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தினமும் ஒரு மெட்ரிக் டன் தரமான பாலாடைக்கட்டி உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின்கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலை, பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் பாலை மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்பாக மாற்றுவதன் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களின் வருமானத்தை உயா்த்த முடியும்.


மேலும், ஆவின் நிறுவனத்தின் உயா்தர பால் உபபொருள்கள் பட்டியலில் பாலாடைக்கட்டி (சீஸ்) தயாரிப்பும் சோ்க்கப்பட உள்ளது. இது மாநிலத்தின் பால் தொழில் வளா்சிக்கும், ஏற்றுமதி வாய்ப்புகளுக்கும் புதிய பாதையை உருவாக்கும் என்றாா்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஆவின் பொது மேலாளா் ராஜேஷ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதானந்த கல்கி, உதகை வருவாய் கோட்டாட்சியா் டினு அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழ குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad