உதகையில் உலக அரசு சாரா தன்னார்வலர்கள் தின விழா
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஏடிசி திடலில் இன்று உலக அரசு சாரா தன்னார்வலர்கள் தின விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவானது பரத கலை சிலம்ப கலை நாட்டியங்கள் சிறப்பாக இடம் பெற்றன அதன் பின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்த அனைவரும் சிறப்புரை ஆற்றினார்கள் இவ்விழாவிற்கு தலைமை உரையை நீதிபதி திரு பாலமுருகன் அவர்கள் ஆற்றினார்கள் அதன் பின் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட தலைவர் திரு சக்தி சுரேஷ் ரமணா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் இதில் கலந்துகொண்ட அனைத்து தன்னார்வல அமைப்புகளை சார்ந்தவர்களுக்கும் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது இறுதியில் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment