நீலகிரி மாவட்டத்தில் பணி காலம் முடிந்தும்கூட பணிபொழிவு அதிகம்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 February 2026

நீலகிரி மாவட்டத்தில் பணி காலம் முடிந்தும்கூட பணிபொழிவு அதிகம்:


நீலகிரி மாவட்டத்தில் பணி காலம் முடிந்தும்கூட பணிபொழிவு அதிகம்: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி  உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 0 டிகிரி வெப்பநிலை – கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வியாழக்கிழமை கடும் குளிர் நிலவியதுடன், சில பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 


இதே நேரத்தில், உதகை குதிரை பந்தய மைதானம், காந்தல் பகுதிகளில் தரையில் வெள்ளை போர்வை போல் உறைபனி பரவியிருந்தது. மேலும் தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை பதிவுகள் தெரிவிக்கின்றன.


நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் பனிக்காலமாக கருதப்படுகின்றன. இக்காலகட்டத்தில் அதிகாலை நேரங்களில் பனித்துளிகள் காணப்படுவதும், தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு உறைபனி நிலவுவதும் இயல்பாக உள்ளது.


 பொதுவாக நீர் பனி தொடங்கிய பின்னர் ஒரு சில வாரங்களில் தான் உறைபனி ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரத்திலேயே உறைபனி தொடங்கியது.


 அதனைத் தொடர்ந்து உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மற்றும் கோத்தகிரியிலும் பணி பொழிவு அதிகமாககணப்படுகின்றது  இரண்டாம் வாரத்திலேயே உறைபனி பரவலாக காணப்படத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டின் குளிர் காலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தீவிரமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


வியாழக்கிழமை காலை நேரங்களில் சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் ஆகியவை முழுவதும் உறைபனியால் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் அதிகளவில் உறைபனி காணப்பட்டதால், காலை நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்


இதன் காரணமாக, அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர் குளிரின் தாக்கம் காரணமாக பலர் வழக்கத்தை விட தாமதமாகவே பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், குறிப்பாக பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகியதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்


 தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்


வயதான பெரியவர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் அதிகளவில் குளிர் தாக்கத்தால் பாதிக்கப்படக் கூடும் என்பதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் போதிய வெப்ப உடைகள் பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

இதற்கிடையே, கடும் குளிர் காரணமாக உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் மெல்லிய பனிமூட்டம் நிலவியதால், சில இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.


உதகை மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் தொடர்ந்து நிலவும் கடும் குளிர் மற்றும் உறைபனி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் விவசாயச் செயல்பாடுகளையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது  


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad