தயக்கமின்றி படித்தால் சாதிக்கலாம் தேவாலா அரசு மேல்நிலை பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 February 2026

தயக்கமின்றி படித்தால் சாதிக்கலாம் தேவாலா அரசு மேல்நிலை பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி


தயக்கமின்றி படித்தால் சாதிக்கலாம் தேவாலா அரசு மேல்நிலை பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், பள்ளி ஆசிரியர்கள் கவியரசன்,  சிவகுமார், தினேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது மருத்துவ படிப்பு பெரும்பாலும் மாணவர்கள் விரும்பும் படிப்பாக உள்ளது. இதற்கு தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றிபெற தமிழக அரசு பாடத்திட்டத்தில் உள்ள 11 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள படங்களை வரி வரியாக படிக்கணும் இவற்றிலேயே நீட் தேர்வு எதிர்கொள்வதற்கான போதுமான அளவு பாடத் உள்ளது. நீட் தேர்வில் 720 மார்க் கேட்கப்படும். 720 மதிப்பெண்ணுக்கு 720 வாங்கும் சூழல் ஏற்பட்டு போட்டி அதிகமாகிவிட்டது.  


தமிழகஅரசு மூலம் மருத்துவம் படிக்க அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு  7.5 இடஒதுக்கீடு உள்ளது இதில் தேர்வாகி போனால் மருத்துவம் படிக்க அரசு முழு செலவையும் ஏற்றுக்கொள்கிறது. பால் மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவம் ஆகியவற்றுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். மருத்துவம் மட்டுமின்றி மருத்துவ துணை படிப்புகாளான செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்தியாவிலும்,  வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளது. அதுபோல் பிசியோதெரபி, மருத்துவர் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. மருந்தளுணர் படிப்பும் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்திடவும் உதவுகிறது.  


மருத்துவதுறை உள்ளிட்ட பட்டப்படிப்பு படித்தவர்கள் மத்திய மாநில அரசு தேர்வுகள் எழுதி அரசு உயர்பதவிக்கு செல்ல முடியும். பயமின்றி தயக்கமின்றி படித்தால் எதிலும் சாதிக்கலாம் என்றார்.


கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் மகேஷ்வரன் பேசும்போது கல்லூரியில் பட்டபடிப்பு தேர்வு செய்து படித்து போட்டி தேர்வு மூலம் தேர்ச்சிபெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். மேலும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. சுயமரியாதை பெற கல்வி அவசியம் என்றார்.


கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி சமூக பணித்துறை தலைவர் மோகன் பேசும்போது சமூக பணி துறையில் படித்தவர்களுக்கு மனநல ஆலோசனை, சமூக பணி மேற்கொள்ள, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. படிக்க தயாராக மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad