TBK நண்பர்கள் குழு 16-வது ஆண்டு துவக்க விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 January 2026

TBK நண்பர்கள் குழு 16-வது ஆண்டு துவக்க விழா

 


TBK நண்பர்கள் குழு 16-வது ஆண்டு துவக்க விழா 


டி பி கே நண்பர்கள் குழுவானது கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு வகையில் உதவி புரிந்து உள்ளது அந்த உதவிகள் நமது  பார்வைக்காக பின்வருமாறு 



1).தக்கர் பாபா நகர் சிறுநீரகம் மாற்று சிகிச்சை க்கு உதவி புரிந்து உள்ளது. 


2.)வயநாடு நிவாரணம் 35,000 ரூபாய் வழங்க பட்டது. 


3.)16 பேருக்கு ரத்தம் தானம் வழங்க பட்டது. 


4.)ஜாய்சி மகள்  மருத்துவ செலவு க்கு 1,30,000 வழங்க பட்டது. 


5.)ருக்கு ஏடத்தி மகள்  மருத்துவ செலவுக்கு 30,000 வழங்க பட்டது. 


6.)மோட்டார் பைக் ல அடிபட்ட சுமோஸ்  மருத்துவ மனைக்கு நேரில் சென்று பார்த்து நிதி உதவி செய்ய பட்டது. 


மற்றும் பல்வேறு உதவிகள் இந்த 16 ஆண்டு காலத்தில் செய்ய பட்டு உள்ளது. இன்று 16-வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு குந்தா,  முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் உனவு வழங்க பட்டது.


மேலும் நமது TBK நண்பர்கள் 623 பேர் இது நாள் வரை பயணிக்கிறார்கள்இவர்கள் அனைவருக்கும் TBK நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் அனைவருடையை ஒத்து உழைப்பு தான் இந்த குரூப் இந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது. நமது குரூப் கட்சி சார்பற்றது, மதம் சார்பாற்றது. அனைவரும் ஒரு குடும்பம். என்றும் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது 


நமது குரூப்பில் பயணிப்பவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், விவசாயிகள், வன துறை அதிகாரிகள், படித்த இளைஞர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், மக்களை தேடி மருத்துவர்கள், வியாபாரிகள், அரசியல் தலைவர்கள், ஊர் தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்லூரி பேராசியர்கள், ராணுவ அதிகாரிகள், பால் உற்பத்தியாளர்கள், தேயிலை தொழிலாளிகள், அரசு பேருந்து ஊழியர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், வாகனம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், கேரட் எடுக்கும் பணியாளர்கள், 100நாள் பணியாளர்கள், நியாவிலை கடை ஊழியர்கள், பல்வேறு நண்பர்கள் என இந்தியா முழுவதிலும் இருந்து பயனிக்கிறகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர் 


நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம், நல்லதே நடக்கும். வரும் போதும் ஒண்ணு கொண்டு வரவில்லை போகும் போது ஒன்னும் கொண்டு போவதும் இல்லை இருக்கும் அனைவருக்கும்  நல்லதை செய்வோம். இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம். என்று இந்த விழாவினை இனிதே நடைபெற்று முடிந்தது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad