இத்தலார் ஊராட்சி போர்த்தி கிராமத்தில் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் உலாவரும் புலி
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி அருகிலுள்ள போர்த்தி கிராமம் செல்லும் தேயிலைத் தோட்டத்திற்குள் காலை 9 மணி அளவில் தனது தோட்டத்திற்கு வந்த நந்தகுமார் என்ற விவசாயி ஒருவர் புலி காலில் காயத்துடன் நடந்து வருவதை பார்த்துள்ளார். உடனே தோட்டத்தின் உரிமையாளர் நந்தகுமார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர். ட்ரோன் மூலம் ஆராய்ந்து புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து பொதுமக்கள் யாரும் அருகில் செல்லமால் மற்றும் இடையூரு இல்லாமல் வனத்துறையினருக்கு உறுதுணையாக இருந்தனர். மேலும் ரேஞ்சர் கிருஷ்ணகுமார் மற்றும் பாரஸ்ட் திருமூர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட குழு மூன்று அணியாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஞ்சர் கிருஷ்ணகுமார் கொடுத்த தகவலின் படி புலி காலில் ஏற்பட்ட காயம் ஆனது மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு காயம் ஏற்பட்டு இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். மற்றும் எமரால்டு காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் வனத்துறையினருக்கு உறுதுணையாக இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் தோட்டத்திற்கு செல்லவோ அவ்வழியில் நடந்து செல்லவும் கூடாது என்று வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர்களால் அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு சுற்றி திரியும் புலி ஊரின் அருகே வந்தாலும் வீட்டின் அருகே வந்தாலும் உடனடியாக வனத்துறையினர் அதிகாரி கிருஷ்ணகுமார்: 8754274674 மற்றும் திருமூர்த்தி : 9047975775 அவர்களின் அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது உடனடியாக அதற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வனத்துறையினர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment