நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கூடலூரில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திடும் வகையில், நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், கூடலூர் காந்தி திடலில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன் தலைமையில் நடைப்பெற்றது, கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தலைமை கழக பேச்சாளர் கோணூர் வீரமணி, இளம் பேச்சாளர் தஸ்லிமா நஸ்ரின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூடலூர் தொகுதி பார்வையாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் லியாக்கத் அலி, ஒன்றிய நகர செயலாளர்கள் சிவானந்த ராஜா, சுஜேஷ், சேகரன், ராஜா, உத்தமன், தலைமை கழக போச்சாளர் பாண்டியராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, பேரூர் செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, உதயகுமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் விவேக் பொன்தோஸ், அருண், கிஷோக், பாயாஸ் உட்பட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், மாணவர் அணியினர், கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிஷோக் நன்றி கூறி கூட்டம் சிறப்பாக முடிந்தது


No comments:
Post a Comment