நீலகிரி கோத்தகிரி ஓவியருக்கு பத்ம ஶ்ரீ விருது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஆலு குரும்பா என்ற பழங்குடியின ஓவியரான திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு 2026 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது புகழ்பெற்ற ஆலு குரும்பா பழங்குடியினர் ஓவியங்களுக்காக இந்த விருது.. இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக தவறிவிட்டார். இவரது திறமைக்கான அங்கீகாரமாக இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் இந்த உயரிய விருதான பத்மஶ்ரீ விருதுக்காக இவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. ஆலுகுரும்பா பழங்குடியினர் சமூகத்தில் பத்மஶ்ரீ விருது பெறப்போகும் முதல் நபர் இவர் தான்.
ஓவியர் ஆர். கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்கள் ......
இவர் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர். ஆலு குரும்பா (Alu Kurumba) என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்.
'கிட்னா' (Kitna) என்ற பெயரிலும் பரவலாக அறியப்பட்டவர்.
இவரது ஓவியங்கள், நீலகிரிப் பகுதியில் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களிலிருந்து (rock art) உத்வேகம் பெற்றவை.
வனப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களை (natural pigments) மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைவதில் இவர் தனித்துவம் மிக்கவர்.
ஆலு குரும்பா மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், திருவிழாக்கள் போன்றவற்றை தனது ஓவியங்களில் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளார்.
சுமார் மூன்று தசாப்தங்களாக, தனது சமூகத்தின் தனித்துவமான கலை வடிவத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சாரும். இவர் ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இவர் மார்ச் 2025 இல் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியின் பழமையான கலை வடிவத்தை அழியாமல் பாதுகாத்து, அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்றதில் ஓவியர் ஆர். கிருஷ்ணன் அவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment