நீலகிரி - உதகையில் 77 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 January 2026

நீலகிரி - உதகையில் 77 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது


நீலகிரி - உதகையில் 77 ஆவது குடியரசு தினவிழா  கொண்டாடப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தின் தலைமையகமான உதகையில் 77-ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில், நீலகிரி மாவட்ட ஆட்சியர்  திருமதி. லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப.,  அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்  நீலகிரி காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப., அவர்களும் உடனிருந்தார்.


அதனைத் தொடர்ந்து, சிறந்த பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.


விழாவின் சிறப்பம்சமாக, நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேரிடர் மேலாண்மை துறையின் மீட்பு ஒத்திகைகள் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன.

 

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின தேசிய அணிவகுப்பில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக அமைந்தது.


கனமழை பெய்த போதிலும், அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று, குடியரசு தின விழாவை தேசிய உணர்வோடு கொண்டாடினர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad