கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 January 2026

கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

 


கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாய்ராம் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறிய கருத்துக்கள்.....

 

இன்றைய நவீன உலகில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்படும் அறிவியல் துறை செயற்கை நுண்ணறிவு ஆகும். இந்த செயற்கை நுண்ணறிவு 1960 ஆம் ஆண்டுகளிலேயே துவங்கி விட்டது. பல துறைகளில் ஊடுருவிய இந்த தொழில்நுட்பம் 1980களில் நமது செல்போன்களில் யூடியூப், பேஸ்புக் பேசுபவர் முகத்தை கண்டறிதல் போன்ற பல தொழில் நுட்பங்கள் உருவாகின. தற்போது தகவல்களை தானாகவே உருவாக்கும் ஏ. ஜி .ஐ எனப்படும் இரண்டாம் தலைமுறை செயற்கை நுண்ணறிவு உருவாகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கல்வி சுகாதாரம் வானியல் போன்ற பல துறைகளில் பிரமிக்க தக்க  அளவில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கல்வித்துறையில் மாணவர்கள் இனி எவ்வாறு கேள்வி கேட்பது என்பதை மட்டும் கற்றுக் கொண்டால் போதும். பதில்களை கம்ப்யூட்டர் வழங்கும். மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன் அவரது கல்வி வளர்ச்சியில் தகுதியை குறிக்கும். சுகாதாரத் துறையில் ஒரு நோயாளியின் மரபணு முழுவதும் ஒரு ஆதார் அட்டை போன்ற கார்டில் பதியப்படும். ஒவ்வொரு நபருக்கும் பிரத்தியோகமான மருந்துகளை செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து பரிந்துரை செய்யும். ஒரு குழந்தையின் மலத்தின் புகைப்படத்தை வைத்து அந்த குழந்தைக்கு என்ன நோய் என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டறியும். ஒரு தாயின் கருப்பையில் உருவான கருமுட்டையை ஸ்கேன் செய்வதன் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தைக்கு ஏற்படும் புற்றுநோய் போன்ற எந்த நோயையும் கண்டறியும் வல்லமை இந்த நவீன தொழில்நுட்பத்திற்கு உள்ளது. காலநிலை மாற்றத்தின் அறிவியலை துல்லியமாக கணக்கிட்டு கண்டறியலாம். இத்தகைய செயற்கை நுண்ணறிவு குறித்த தகவல்கள் ஏராளமாக உருவாகும் அவற்றை கம்ப்யூட்டரில் பதியும் தொழில் நுட்பமான டேட்டா என்ட்ரிக்கு  ஏராளமான டெக்னீசியன்கள்  தேவைப்படும். இதனால் புதிய  வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு ஆதாரமாக உள்ளது கணிதம் இயற்பியல் உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல் துறைகளாகும். ஆனால் தற்போது இந்த அறிவியல் துறைகளை பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து வருவது வருந்தத்தக்கது. மாணவர்கள் இந்த அடிப்படை அறிவியல் பெற்றால் ஒழிய வருங்கால வேலைவாய்ப்புகளில் பங்கேற்க முடியாது. அரசாங்கமும் மாணவர்கள் இந்த அடிப்படை அறிவியல் கல்வி பெற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இன்றி விஞ்ஞானிகள் ஆகும் வரை இலவச கல்வி அளித்து  மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் களப்பணியாளர் மித்ரா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக ஆசிரியை காஞ்சனா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் கஜேந்திரன் நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad